Monday, 4 February 2008

கப்டன் பருதிநெஞ்சன்


கப்டன் பருதிநெஞ்சன் அவர்களின் 4'ம் ஆண்டு நினைவில்..!!
ஸ்ரனிஸ்லோஸ் திலிபராஜ்
தாயின் மடியில் ~ 23 ஆனி 1985
தாய் மண்ணின் மடியில் ~ 04 மாசி 2008
செம்பியன்பற்று யாழ் மாவட்டம்

கப்டன் பருதிநெஞ்சன் 
ஸ்ரனிஸ்லோஸ் திலிபராஜ்
தாயின் மடியில் 23 ஆனி 1985
தாய் மண்ணின் மடியில் ~ 04 மாசி 2008
செம்பியன்பற்று யாழ் மாவட்டம்




'' வித்தாகி... விதையாகி... விருட்சமாய்... ''

வித்தாகி
இருபத்தேழும்
விதையாகி

விருட்சமாகி
நான்காண்டாகி
விட்டது
தோழனே..!
கல்வி
கற்க
கவசம் தேவையென
உணர்ந்து
படைய அறிவியற்கல்வியில்
பார் வியந்து
நின்றாய்..!
களமொன்றில்
கையொன்று
ஊனமாக்கி
கயவரை
கலைத்தழித்தாய்...
கையொன்றுதான்
எனவெண்ணி
தன்நம்பிக்கையோடு
சக தோழரருடன்
தலைவரருகே 
நிமிர்ந்தே
நின்றாய்...!!
கல்வியில் சாதுருரியனாய்,
புகைப்படம்
பிடிக்கும்
சாணக்கியனாய்,
குத்துச் சண்டை 
வீரனாய்,
நவீனரக சுடுகுழல்கள்
இயக்கும்
விஞ்ஞானியாய்,
வியந்தே நின்றாய்...!
இன்று
உன் பிரிவும்,
ஏனைய தோழர்கள்
பிரிவும்
நெஞ்சுக்கு
கனதியாய் என்
ஆன்மாவை
எரிக்கிறது -எங்கே
தமிழீழம் எங்கே
தமிழீழம்
என்றபடி .....!!

வரிகள் ~ தமிழ்வாணன்





















































'' உன்..
எமது தோழர்
எண்ணம் ஈடேற
எவருக்கும் அடிபணியாது
இறுதி மூச்சோடு உழைப்போமாக...

'' புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ''

No comments:

Post a Comment